இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம்!

0
161

மேஷம்

இன்று தங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும் நாள், அலுவலகப் பணிகளில் அனுகூலம் கிடைக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு, கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தினர்களின் ஆதரவு கிடைக்கும் கொடுத்த பாக்கிகள் வசூலாகும், உத்தியோகத்திலும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள், மறதியால் பல வேலைகளை விட்டு விடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது, உறவினர்களிடமிருந்து விமர்சனங்கள் வரலாம், சேமிப்பில் சற்றே கரையும்.

கடகம்

இன்று தாங்கள் பாராட்டு மழையில் நனையும் நாள், வீடு மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும் ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள், உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும் நாள், பணத்தால் வந்த சிக்கல் நீங்கும் எதிரிகள் விலகிச் செல்வார்கள், தொழில் வளர்ச்சி உண்டாகும், அரசு வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும் கடிதத்தின் மூலமாக கனிவான தகவல் வந்து சேரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு விஐபிக்களின் சந்திப்புகள் கிடைக்கும் நாள், பெற்றோர்கள் வழியால் ஏற்பட்ட பிரச்சனை நீங்கும் வருமானம் திருப்திகரமாக இருக்கும், தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் வியக்கும் வகையிலான செய்திகள் வீடு வந்து சேரும் நாள், வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும், வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும்.

தனுசு

இன்று தங்கள் அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள், அரசு வழி அனுகூலம் கிடைக்கும் தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்துக்கள் மகிழ்ச்சியடைவீர்கள், திருமணத்தடை நீங்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு துணிவும், நம்பிக்கையும், அதிகரிக்கும் நாள், வாரிசுகளில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். சொத்து பிரச்சனை சுமோகமாக முடிவடையும், உடன் பிறப்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும்

கும்பம்

இன்று தங்களுக்கு மன குழப்பம் அதிகரிக்கும் நாள், பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நன்று. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது மிகவும் நன்று, காரியங்கள் கடைசி சமயத்தில் கைநழுவி செல்லலாம்.

மீனம்

இன்று தாங்கள் மிகவும் யோசித்து செயல்படுவது நல்லது, எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நன்று. தொழில் கூட்டாளிகளின் ஒத்திவைப்பு குறைவாக இருக்கும், சுபரயங்கள் ஏற்படும், உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

Previous articleநடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!
Next articleகன்னியாகுமரி பகவதி அம்மன் வரலாறு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here