கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவையானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
புராணங்களில் கடுமையான தவத்தை மேற்கொள்வதன் மூலமாக அசுரர்கள் கூட வரங்களை மிக சுலபமாக பெற்றுவிடுவார்கள். கடுமையான தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை வழங்கிவிடுவார்கள்.
அந்த வகையில், பாணாசுரன் என்ற அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடுமையான தவம் புரிந்து தன்னை யாராலும் அழிக்க முடியாது எனவும், ஒரு கன்னிப் பெண்ணை தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக்கூடாது எனவும், வரத்தை பெற்று விட்டான்.
அந்த அரக்கன் மென்மையான தேகத்தையும், மென்மையான மனதையும், கொண்ட ஒரு கன்னிப் பெண் மூலமாக எப்படி மரணம் நிகழ முடியும் என நினைத்து இவ்வாறு ஒரு வரத்தை வாங்கி விட்டான்.
வரத்தை பெற்றுக்கொண்ட பானா சூரனின் அட்டகாசம் அளவில்லாமல் சென்று கொண்டிருந்தது. முனிவர்களையும், தேவர்களையும், கொடுமைப்படுத்திக்கொண்டிருந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும், விஷ்ணுவை தஞ்சமடைந்தனர்.
ஆனாலும் விஷ்ணுவோ பாணாசூரனின் மரணத்தில் இருக்கும் கன்னிப் பெண்ணால் தான் மரணம் என்ற ரகசியத்தை அவர்களுக்கு தெரிவித்துவிட்டார்.
ஆகவே விஷ்ணுவின் அருகில் அமரத்து கொண்டிருந்த சிவபெருமான் இதற்கு ஒரு தீர்வை வழங்கினார். அந்த அசுரனை அழிப்பதற்கு அம்பாளான சக்தி தேவியால் தான் முடியும் என்ற ஆலோசனை தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், வழங்கப்பட்டது. தேவர்களும், முனிவர்களும், சக்தி தேவியை நினைத்து தவம் மேற்கொண்டனர்.
தேவர்களையும், முனிவர்களையும், அந்த அசுரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக சக்தி தேவி கன்னிப் பெண்ணாக தென் பகுதியான குமரியில் ஆதரித்தார். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாக பிறந்த சக்தி தேவி அந்த ஈசனிடம் பக்தி கொண்டு ஈசனை மணமுடிப்பதற்கு கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
அந்த நேரத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் எனும் இடத்தில் தாணுமாலயன் என்ற பெயர்ப்பெற்று வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகனை கண்டு அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் சிவபெருமான்.
இதனையறிந்து கொண்ட தேவர்களும், முனிவர்களும், கடுமையான பயத்துக்கு உள்ளானார்கள். சக்தி தேவிக்கு திருமணம் நடைபெற்று விட்டால் அந்த அசுரனை எவ்வாறு அழிப்பது என தான் அவர்களின் பயம் இருந்தது. ஆனால் முக்காலத்தையும் உணர்ந்து கொண்ட அந்த நாரத முனிக்கு மட்டும் இது அந்த ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றுதான் என புரிந்தது.
சக்தி தேவிக்கும், சிவபெருமானுக்கும், நடைபெறவிருக்கும் திருமணம் பேச்சும் சபைக்கு வந்தது. ஆனால் இந்த திருமணமானது எப்படியாவது நிற்க வேண்டும் என்பதுதான் தேவர்கள் மற்றும் நாரதரின் எண்ணமாக இருந்தது. திருமணத்தை நிறுத்துவதற்கு நாரதர் கலக்கத்தை ஆரம்பித்துவிட்டார் நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்.
அதாவது சிவபெருமானை பார்த்து தேவர்கள் சார்பாக ஒரு கோரிக்கையை முன் வைத்தார். சூரியன் உதயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளை சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.
சக்தி தேவியிடம் இந்த கோரிக்கையானது தெரிவிக்கப்பட்டது, மாப்பிள்ளை சூரிய உதயத்திற்கு முன்பாக வரவில்லை என்றால் இந்த திருமணம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திருமணம் நடைபெறும் நாளும் வந்தது, சுசீந்திரத்தில் இருந்து சிவபெருமான் குமரியை நோக்கி புறப்பட்டார். விடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவலாக உருவெடுத்து கூவி விட்டார்.
சேவலின் சத்தத்தை கேட்டு சிவபெருமான் சூரியன் உதித்து விட்டது இனி சென்றாலும் திருமணம் நடைபெறாது என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் சுசீந்திரத்திற்க்கே சென்றுவிட்டார்.
குமரி முனையில் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் தேவியின் கோபம் உச்சத்தை அடைந்தது. சூரியன் உதித்து விட்டார் ஆனால் இன்னும் தேவியை மணம் முடிப்பதற்கு சிவபெருமான் வரவில்லை என்ற கோபம் தேவிக்கு அதிகமானது.
திருமணத்திற்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவு பண்டங்களையும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களையும், எடுத்து கடல் மணல் பரப்பில் வீசினார்.
இதன் காரணமாக தான் கன்னியாகுமரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ணங்களாக காட்சி தருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. தேவியின் அழகில் மயங்கி மணம் முடித்துக் கொள்வதற்காக வருகை தந்தான்.
தேவி தற்போது கோபத்தின் உச்ச கட்டத்தில் இருக்கிறார் தன்னுடைய விருப்பத்தை கூறிய பாணாசூரனிடம் உன்னை மணப்பது எனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார். ஆனால் பாணாசுரன் விடவில்லை கட்டாயப்படுத்தி சக்தி தேவியிடம் மணமுடிக்க வலியுறுத்தினான்.
சக்தி தேவியை நெருங்க நினைத்த அவனால் அருகில் கூட செல்ல முடியவில்லை, அவளுடைய கோபம் தீப்பிழம்பைப்போல அதிகரித்தது. ஓங்கி உயர்ந்து வானளாவிய உருவத்தைக் கொண்ட பராசக்திதேவி பாணாசுரணை தன்னுடைய கால்களால் மிதித்து வதம் செய்தார்.
தேவர்கள் அனைவரும் தேவியை பூக்கள் தூவி சாந்தமடைய செய்தார்கள், தங்களை காப்பாற்றிய தேவிக்கு தெரிவிக்கும் நன்றியையும் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர்.
கோபம் தணிந்த சக்தி தேவி சாந்தியடைந்து அந்த நாள் முதல் இன்று வரை கன்னியாகுமரியின் கன்னி பெண்ணாக, பகவதி அம்மனாக, அமர்ந்து அந்த சிவபெருமானை நினைத்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை நீக்கி கொண்டிருக்கிறார் என்று வரலாறு சொல்கிறது.