வீட்டு உபயோக சிலிண்டர் திடீர் விலை உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

0
181

தமிழ்நாட்டில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1058.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை வீடுகளுக்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கும், விற்பனை செய்து வருகிறார்கள், அந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன.

அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1018 ரூபாய்க்கு விற்பனையானது இந்த சூழ்நிலையில், இன்று சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1068. 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleமுதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்த யானை… மகிழ்ச்சியில் அருண் விஜய்
Next articleஎச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!