தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

0
112

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய அடுத்த கட்ட கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அடுத்து எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதில் தங்களுடைய முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

அதே போல 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தவர்கள் 11ம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவை தேர்வு செய்யலாம் என்று யோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைநகர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியியாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருக்கின்ற 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வரும் 17ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரி மாணவிகளுக்கு1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரையில் 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். அரசு கலை கல்லூரிகளில் சேர 3 லட்சம் மாணவ, மாணவிகள், விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.

Previous articleவிரைவில் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்படும் அதிரடி மாற்றம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!
Next articleஇவர்களுக்கு மட்டும் தான் மாத உரிமைத் தொகை! வெளியானது அதிரடி அறிவிப்பு!