நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில், தற்போது திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக விசாரித்து வந்த தனிப்படை காவல்துறையினர் சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்து காரணமாக உயிரிழந்தார்.
அவருடைய இறப்பிலும் சந்தேகம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.
ஆகவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கோயம்புத்தூர் தொழிலதிபர் செந்தில்குமார் நேரில் ஆஜராகு மாறு தனி படை காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
காவல்துறையினர் அனுப்பிய சம்மனின் பேரில் கோயம்புத்தூருக்கு காவல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இருக்கின்ற விசாரணை பிரிவு அலுவலகத்தில் தொழிலதிபர் செந்தில்குமார் நேற்று நேரில் ஆஜரானார்.
அவரிடம் கோடநாடு பங்களாவில் மாயமான ஆவணங்களை அவருடைய வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக கோயம்புத்தூர் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் தொடர்ந்து 3து நாளாக தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.