ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுக பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட இரட்டை தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டது பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பிறகு பழனிச்சாமி முதலமைச்சராகவும் பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் ஆகவும் பதவி வகித்தனர். 4 1/2 வருட காலம் சிறப்பாக ஆட்சியை ர் நடத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.
ஆனால் அந்த கட்சிகள் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை வெகுவாக இருந்தது. அதிலும் குறிப்பாக சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் திமுகவிடம் அதிமுக தோல்வி அடைந்ததற்கு வெறும் 2 1/2 சதவீத வாக்கு வித்தியாசம் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த இரண்டரை சதவீத வாக்கு வித்தியாசமும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் பிரிந்து சென்றது என்று பலரும் தெரிவித்தார்கள்.
அதோடு திமுக பலமான ஆளு குச்சியாக அமர்ந்திருப்பதால் அந்த கட்சியை எதிர்த்து எதிர்வினையாற்றும் திறன் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட அதிமுகவை சார்ந்தவர்கள் ஒரு மனதாக அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த நிலையில் தற்போது அடுத்து வரவிருக்கும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அந்த கட்சிக்கு ஒற்றை தலைமை என்பது மிகவும் முக்கியம் அதுவும் அந்த ஒற்றை தலைமை என்பது எடப்பாடி பழனிச்சாமி வசம்தான் செல்ல வேண்டும் என்பதே அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பமாக இருந்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்த நிலையில் கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காதலை 8 மணி அளவில் புறப்பட்டு சென்றார் இதனைத் தொடர்ந்து பரபரப்பு உண்டானது.
இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கின்ற நிலையில் அதிமுகவில் அடுத்ததாக இன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெறவிருக்கும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார்.
ஆனாலும் கூட பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர்களுடன் வீட்டில் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார் இதனை தொடர்ந்து அவர் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ராயப்பேட்டையிலிருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே அதிமுகவின் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கு வந்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் காயமற்றதாக தெரிவிக்கப்படுகிறது இதனை அடுத்து பதட்டம் விலை விபத்து இதற்கான அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு தடையில்லை என தற்போது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும் கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.