நீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இது இன்னைக்கு உங்களுக்கு நடந்தே தீரும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு காரணமாக, நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், தொழில் வளர்ச்சியில் இருந்த தடைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள், மற்றவர்களின் மனம் புண்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம், குடும்ப உறுப்பினர்களிடையே விரோதம் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு இன்னல்கள் யாவும் நீங்கும் நாள், ஆதாயம் கொடுக்கும் தகவல் அதிகாலையில் வரலாம். வியாபாரத்தில் ஏற்றமும், இறக்கமும், உண்டாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

கடகம்

இன்று இதுவரை தாமதித்த காரியம் ஒன்று தடையின்றி நடைபெறும் நாள், தன வரவு எதிர்பார்த்தபடி இருக்கும், எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்றார் போல செயல்படுவீர்கள், குடும்பச் சுமை அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் கடமையிலிருந்த தொய்வான நிலை நீங்கும், பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது மிகவும் நன்று , வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

கன்னி

இன்று தாங்கள் விரும்பும் விதத்தில் வெளியுலக தொடர்பு இருக்கும் நாள், தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், கலை துறையினர் சந்திப்பால் காரியம் ஒன்று முடிவாகும், பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

துலாம்

இன்று தங்களுக்கு வரவும், செலவும், சமமாக இருக்கும் நாள், வாய்ப்புகள் வந்தும் அதனை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது, சகோதரர்கள் வழியில் சச்சரவுகள் ஏற்படும், பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள், வரும் பிரச்சினைகளை சாமத்தியமாக சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புகழ் அதிகரிக்கும், தொழிலில் லாபம் உண்டு, அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு குழப்பங்கள் யாவும் நீங்கும் நாள், பண தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் நண்பர்கள் மூலமாக வந்து சேரும், திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் நீங்கும் ,நாள் முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரியளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம், உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும்.

கும்பம்

இன்று தாங்கள் உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்ச்சியாடையும் நாள், அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், மதியத்திற்கு மேல் சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும்.

மீனம்

இன்று தாங்கள் புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உபயோகத்தில் பதவி உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவாகும்.