ஏகாதசி திதியன்று தாய், தந்தைக்கு சிரார்த்தம் வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி நாளன்று நடத்த வேண்டும்.
ஏகாதசி என்று கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதத்தை கூட சாப்பிட கூடாது, அதேபோல பிரசாதம் கோவில்களில் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும், குழந்தைகள் நோயாளிகள் முதியோர்களுக்கு இதனை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஏகாதசியன்று உணவருந்தாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உணவு உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக் கீழ்த்தரமான நரகத்திற்கு செல்வான், இந்த நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது.
ஒருவேளை துளசிகளை தேவைப்பட்டால் அதனை முதல் நாளே பறித்து வைத்து விடுவது மிகவும் நன்று.