கன்னியாகுமரி பகவதி அம்மனின் மூக்குத்தியின் கதை!

0
222

கன்னியாகுமரி பகவதி அன்னையின் மூக்குத்தி யோக சக்தியின் வெளிப்பாடு என்ற காரணத்தால், பக்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்த காலகட்டம் அது.

மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த சமயத்தில் திருவிதாங்கூர் பகுதியில் வசித்த ஒரு பனையேறும் தொழிலாளிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர். நான்காவதாக அந்த தொழிலாளியின் மனைவி கருவுற்றிருந்தார்.

ஆனாலும் அந்த பிரசவத்திலும் அந்த பெண்மணிக்கு பெண் குழந்தை பிறந்தது, அதனை அவருடைய மூத்த மகள் தன்னுடைய தந்தையிடம் வந்து சொன்னாள் ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்தவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் 5வது முறையாக மனைவி கருவுற்றிருந்தார்.

இப்போதும் பெண் குழந்தையே பிறந்தது, பனைமரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த தந்தையிடம் அவருடைய மூத்த மகள் இந்த தகவலையும் தெரிவித்தார். அவருடைய மனம் தற்போது அடுத்த முறை பெண் குழந்தை பிறந்ததாக தன் மகன் வந்து என்னிடம் சொன்னால் மரத்திலிருந்து 2 கைகளையும் எடுத்துவிட்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.

6வது முறையும் அந்த தொழிலாளியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது அந்த விஷயத்தை அவருடைய மூத்த மகள் அவரிடம் வந்து சொல்ல, அந்த தொழிலாளி மரத்தை விட்டு கீழே இறங்கி இருந்தார். ஆனால் உடனடியாக தற்கொலை செய்து கொள்வது இயலாமல் போனது.

அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்த போதும் அவருடைய மூத்த மகள் தன்னுடைய தந்தை மரத்தை விட்டு கீழே இறங்கியதும் தான் வந்து சொன்னாள்.

வாழ்வே வெறுத்துப் போன தொழிலாளிக்கு அருகிலிருந்தது புற்று அதற்குள் கையை நுழைத்தார். புற்றுக்குள் பாம்பு ஏதாவது இருந்து கடித்தால் இறந்து போய்விடலாம் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது.

தெய்வம் நினைத்தால் தானே எதுவும் நடக்கும் தொழிலாளி ஏதோ ஒன்று சுடுவதை போன்று உணர்ந்தார்.

ஆனால் சட்டென்று கையை எடுத்தவரின் கையோடு வந்தது அந்த மாணிக்க கல் அதனை கொண்டு சென்று மன்னனிடம் ஒப்படைத்தார் அந்த பனைத் தொழிலாளி. அதை பெற்றுக் கொண்ட மன்னன் அவருடைய குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அந்த தொழிலாளியின் பெயரில் எழுதி வைக்கச் சொன்னார். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார் தொழிலாளி இல்லை இல்லை பல ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்.

அன்றிரவு திருவிதாங்கூர் மன்னனின் கனவில் தோன்றிய சிறுமி இன்று காலை ஒரு பனைத் தொழிலாளி உன்னிடம் ஒரு மாணிக்க கல் கொண்டு வந்து கொடுத்தாரே அதில் எனக்கு ஒரு மூக்குத்தி செய்து தரக் கூடாதா? என்று கேள்வி எழுப்பினார்.

காலையில் எழுந்தவுடன் நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்க சொன்னார் மன்னன். அவ்வாறு பிரசன்னம் பார்த்ததில் கனவில் தோன்றிய சிறுமி கன்னியாகுமரி பகவதி அம்மன் என்பது தெரிய வந்தது.

மன்னன் உடனடியாக தன்னிடமிருந்த மாணிக்க கல்லில் ஒரு மூக்குத்தியை செய்து அதனை தேவிக்கு சமர்ப்பணம் செய்தார். அந்த மூக்குத்தியை தான் இன்றளவும் பகவதி அன்னை அணிந்திருக்கிறாள் என சொல்லப்படுகிறது.

அந்த மாணிக்க கல்லின் ஒளி பல மடங்கு அதிகமாக இருந்த காரணத்தால், அன்னையின் மூக்குத்தி வெளிச்சத்தை கலங்கரை விளக்கமாக நினைத்துக் கொண்ட கப்பலோட்டிகள் பலரும் விபத்துகளை சந்திக்க நேர்ந்தது.

ஆகவே ஆலயத்தின் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு தெற்கு வாசல் வழியாக சென்று தேவியை தரிசிக்கும் நடைமுறை பழக்கத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

Previous articleகுரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த இணையத்திற்கு சென்று உடனே இதனை செய்யுங்கள்!
Next article+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு!