அதிமுகவில் தற்போது அந்த கட்சி மீண்டும் பிளவு பட்டு விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது எம்ஜிஆர் உயிரிழந்த சமயத்தில் எப்படி ஜானகி அணி, ஜெயலலிதா அணி, என இரு அணிகளாக அந்த கட்சி பிளவு பட்டதோ அதேபோன்று ஒரு நிலை மீண்டும் தற்போது வந்து விடுமா என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் என்ற பதவி மீண்டும் ஏற்படுத்தப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
அத்துடன் அடுத்து வரும் 4 மாதங்களில் தொண்டர்களால் அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும், இருந்து வந்த பன்னீர்செல்வம் அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதோடு அவருக்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட முக்கிய நபர்களும் அதிரடியாக அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அதோடு கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க அந்த சமயத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த பன்னீர்செல்வம் பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தின் பூட்டை கடப்பாரையை கொண்டு உடைத்து உள்ளே இருந்த பல முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றார் என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஆதரவாளர்களுக்ககிடையே தகராறு கல்லூரிகள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்ததாக தெரிகிறது.
ஆனால் இதனை காவல்துறையினர் அந்த பகுதியிலிருந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து பேச அனுமதி கேட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
செஸ் ஒலிம்பியார்ட் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 28ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். அப்போது அவரை சென்னையில் சந்தித்து பேசுவதற்கு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டிருக்கும் பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்ததாவது கட்சி தேர்தல் மூலமாக 5 வருடங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் ஆகவே என்னை நீக்கியது செல்லாது. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் மனு வழங்கி இருக்கிறார்.
அதேபோன்று பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்தை தன் தரப்புக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பழனிச்சாமி அதே தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பழனிச்சாமிக்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் வழங்கும் உத்தரவை பொருத்து தான் டெல்லி பாஜக மேலிடத்தின் நிலைப்பாடு தெரியவரும் என்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருக்கிறார்.
ஜாதி ரீதியாக அதிமுகவை பழனிச்சாமி தரப்பைச் சார்ந்தவர்கள் பிளவு படுத்திவிட்டார்கள் தனக்கு அதிமுகவில் கொடுக்கப்பட்டிருக்கின்ற நெருக்கடி தொடர்பாகவும், பிரதமரிடம் அவர் முறையிட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
எதிர்வரும் 28ஆம் தேதி தலைநகர் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுவதற்கு பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி அதற்கு அனுமதி வழங்கினால் பிரதமரிடம் பழனிச்சாமியின் நடவடிக்கைகள் தொடர்பாக பன்னீர்செல்வம் முறையிடுவார் என்று சொல்லப்படுகிறது.