நோய்த்தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகிறார்கள். சில நாடுகள் முதியவர்களுக்கு 4ம் கட்ட தவணை தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதேபோல இந்தியாவில் 18 வயதிற்கும் மேற்பட்ட எல்லோருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ஆரம்பமானது.
ஆனாலும் கூட 18 முதல் 59 வயது வரையிலான பிரிவை சார்ந்தவர்களுக்கு தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவும், நோய் தொற்று கட்டுக்குள் வந்தாலும் கூட பலரும் 2ம் கட்ட தவணை தடுப்பூசி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி உள்ளிட்டவற்றை செலுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கும் கட்டணம் என்று செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை தவணையை அனைத்து தரப்பினருக்கும் கட்டணமின்றி செலுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 18 வயது முதல் 59 வயது வரையிலான பிரிவை சார்ந்தவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இன்று முதல் கட்டணம் என்று இலவசமாக செலுத்துவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக்மாண்டுவியா தெரிவித்திருக்கிறார். மத்திய அரசு மேற்கொண்டு வரும் இந்தியாவின் 75வது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 75 நாட்கள் சிறப்பு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு அரசின் சார்பாக தடுப்பூசி மையங்களில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் அடுத்த 75 தினங்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கட்டணமின்றி இலவசமாக செலுத்தப்படவுள்ளது. இந்த முடிவை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி என கூறியிருக்கிறார்.
மேலும் இந்த முடிவை நோய் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும் எனவும், தகுதியுள்ள எல்லோரும் முன்னெச்சரிக்கை தவணையை மிக விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையினடிப்படையில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கான இடைவெளியை 9 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.