கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
அதோடு பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், சமூக இடைவெளியில் உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலைதள பதிவு மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை எடுத்து தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அதோடு தனக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால் தன் உடன் தொடர்பில் இருந்தவர்கள் நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து கடந்த மூன்று தினங்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திடீரென்று நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு சென்ற முதலமைச்சருக்கு முதலில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, அதன் பிறகு அவருக்கு தொண்டை மற்றும் உடல் வலி உள்ளிட்டவை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று பிற்பகலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட ஒரு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நோய் தொற்று அறிகுறிக்கான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையிலிருக்கின்ற காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
அதோடு உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெரிய அளவில் சிகிச்சை வழங்கும் அளவுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும், தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், காவேரி மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிவடைந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய் தொற்று அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் நடைபெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் திடீரென்று மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.