ஜிஎஸ்டியில் கொண்டுவரப்படும் அதிரடி மாற்றம்! அத்யாவசிய பொருட்களின் விலை கிடு கிடு உயர்வு!

0
152

ஜிஎஸ்டி குறித்து வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வருகின்ற திங்கள் முதல் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி மேலும் அதிகரிக்கப்படவிருக்கிறது.

சென்ற ஜூன் மாதம் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் சேவைகள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை திருத்தி அமைப்பதற்கு அரசு முடிவு செய்திருந்தது. இதன் காரணமாக தான் புதிய ஜிஎஸ்டி வரி ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதன் விளைவாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் அதிகரிக்கும் என்றும், அதோடு வேறு சில பொருட்களின் விலையும், குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

ஜிஎஸ்டி திருத்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் விலை அதிகரிக்கும் மற்றும் விலை குறையும் பொருட்களின் பட்டியலை தற்போது இங்கே காணலாம்.

ஜிஎஸ்டி விகித திருத்தத்தில் எந்த பொருட்களின் விலை அதிகமாக இருக்கும்?

லீகல் மெட்ராலஜி சட்டத்தினடிப்படையில் முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் ஓட்டப்பட்ட தயிர், மற்றும் ,மோர் ,பால் உள்ளிட்ட சில்லறை பொருட்களுக்கு ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த பொருட்கள் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே பேக்கிங் செய்யப்பட்டதால் இதற்கு ஜிஎஸ்டி வரம்பில் விலக்கு உண்டு என சொல்லப்படுகிறது.

காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும் இந்த கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அறை வாடகை ஐ சி யூ ஐ தவிர்த்து ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு 5000க்கும் மேல் ITC இல்லாத அறைக்கு வசூலிக்கப்படும், தொகைக்கு 5% வரை வரி விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அட்லீஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் வரும் 18ஆம் தேதி முதல் 12 சதவீதம் ஜி எஸ் டி விதிக்கப்படுவதாகவும், விடுதி அறைகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டிக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்குள் கொண்டு வருவதற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

ஜி எஸ் டி கவுன்சில் இந்த தலைகீழ் வரி கட்டமைப்பின் காரணமாக, வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக, LED விளக்குகள் LED விளக்குகள் சாதனங்கள், விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தரிக்கோல் உள்ளிட்ட தையல் சார்ந்த பொருட்கள் மற்றும் பென்சில், ஷார்ப்புணர்கள், போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், பிளேடுகள், ஸ்பூன்கள், போர்க்ஸ், உள்ளிட்ட சில்வர் பொருட்கள் லேடீல்ஸ் ஸ்கிம்மர்கள் கேக் உள்ளிட்ட நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஜிஎஸ்டி விகித திருத்தத்தில் எவற்றிற்கெல்லாம் ஜிஎஸ்டி வரி குறையும்?

தனியார் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பாதுகாப்பு பொருட்களின் மீதான ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு வழங்கப்படும்.

எரிபொருட்களை உள்ளடக்கிய ஆபரேட்டர்களுடன் கூடிய சரக்கு வண்டிகளை வாடகைக்கு எடுப்பதில் ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 12 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பு முறிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள், உடலின் செயற்கை பாகங்கள் குறைபாடுகளை ஈடு செய்வதற்கு உடலில் பொருத்தப்படும் மற்ற உபகரணங்கள் கண் விழி லென்ஸ் இவற்றின் ஜிஎஸ்டி விகிதங்கள் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறையும் எனவும், இந்த கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

கேசினோ ஆன்லைன் கேமிங்கில் ஜிஎஸ்டி

கேசினோக்கல் இணையதள கேமிங் மற்றும் குதிரை பந்தயம் தொடர்பாக அமைச்சர்கள் குழு இந்த நடவடிக்கைகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கும் விதத்தில் பணியை மேற்கொண்டது இப்படியாக ஜிஎஸ்டியின் வரி விதிப்பில் மாற்றங்கள் வரவிருப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.