திருப்பதி ஏழுமலையான் கோவில்!

0
206

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டி இருக்கின்ற திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.

சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்ரி,வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி, உள்ளிட்ட 7 மலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு பெயரும் உண்டு.

திருவேங்கடமும் பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கி வந்தாலும் பொதுவில் திருப்பதி என்றழைக்கப்படுகிறது. மலைக்கு மேல் உள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றவற்றை கீழ் திருப்பதி எனவும் அழைக்கிறார்கள்.

வாழ்வில் திருப்பம் நிச்சயம் என திருப்பதி தல தரிசனத்தை சொல்வார்கள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின் அற்புதமான திருத்தலம் இது .இந்த தளம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

வரலாறு

உலகின் துயரங்கள் அநீதிகள் அனைத்தும் அகன்று அனைத்து விதமான நன்மைகளும் பெருக்க வேண்டும் என்பதற்காக முனிவர்கள் ஒரு பெரிய யாகம் நடத்த முடிவு செய்தார்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அந்த மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு பிருகு முனிவரிடம் வழங்கப்பட்டது.

அந்த முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு என சொல்லப்படுகிறது. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தியும் உண்டு என சொல்லப்படுகிறது. இதனை பயன்படுத்தி அடுத்தவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அளாதி இன்பம் இதனால் உண்டான அவருடைய கர்வத்தை பங்கம் செய்வதற்கு சிவபெருமானும் தருணம் எதிர்பார்த்து காத்து இருந்தார்.

பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார் அங்கே சரஸ்வதியின் பிரம்மதேவன் தனித்திருந்தார்கள். ஆனால் முனைவர் அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார்.

பிரம்மதேவன் இதனை கண்டித்தார் இதன் காரணமாக, கோபமடைந்த பிருகு முனிவர் பக்தர்களை வரவேற்காத பிரம்மதேவனுக்கு உலகில் பூஜையே நடக்காது என்று சாபமிட்டு கைலாயத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியின் தனித்திருந்தார்கள் அங்கே வந்த தடைகளையும் பொறுப்பெடுத்தாமல் உள்ளே நுழைந்தார் முனிவர். சிவபெருமான் கோபத்துடன் அவரை கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி ஈசனுக்கு சாபம் கொடுத்தார் பிருகு முனிவர்

பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும் அதற்கே பூஜை நடக்கும் என்று சாபம் கொடுத்தார். வைகுண்டத்திற்கு இதன் பிறகு அவர் புறப்பட்டு சென்றார்.

அங்கே உறக்கத்திலிருந்த பெருமாள் முனிவரின் வருகையை அறிந்து கொண்டும் அறியாதவராக துயில் கொண்டிருந்தார். இதனால் மிகுந்த கோபம் அடைந்த முனிவர் பகவானின் மார்பில் எட்டி உதைத்தார்.

ஆனால் திருமால் கோபம் கொள்ளவில்லை குழந்தை மார்பில் உதைத்தால் தந்தைக்கு கோபம் வருமா என்ன? அதே நேரம் குழந்தையின் துடுப்புத்தனத்தை களைந்தெடுக்க வேண்டாமா?

முனிவரின் பாதம் நோகுமே என்று அந்த முனிவரின் பாதத்தை பிடித்து விடுபவர் போல அதிலிருந்து ஞானக்கண்ணையும் பிடுங்கி எரிந்து விட்டார் திருமால்.

இதனால் முனிவர் அவருடைய சாந்தத்தை கண்டு அவரை யாக பலனை ஏற்க தகுதியான மும்மூர்த்திகளில் ஒருவர் என முடிவு செய்தார். ஆனால் தான் வசிக்கும் திருமாலின் திரு மார்பை முனிவர் எட்டி உதைத்திருக்கிறார்.

இருந்தாலும் அவரை தன்னுடைய நாயகன் கண்டிக்கவில்லையே என்று திருமகளுக்கு கோபம் வந்துவிட்டது. ஆகவே லட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்திலிருந்து கிளம்பி பூலோகத்தையடைந்து தவத்தில் ஈடுபட்டார்.

அதேநேரம் பெரும்பாலும் திருமகளை தேடி பூலோகத்தை சுற்றி அலைந்து வந்தார். வேங்கட மலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசி எடுக்க தொடங்கியது, இது தொடர்பாக நாரதர் நடந்ததை திருமகளிடம் சொன்னார். திருமகள் வருத்தமடைந்தார் நாரதர் அவரிடம் திருமாலின் பசியை போக்க ஏதாவது உபாயம் செய்யுங்கள் என கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில் பிரம்மதேவன், சிவபெருமானும், பசுவாக மற்றும் கன்றாக உருவெடுக்க லட்சுமி தாயார் அவற்றின் எஜமானியை போல வேடமணிந்து அந்த சமயத்தில் அந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னனிடம் விற்க சென்றார்கள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்கு செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்கு சென்று பாலிட்டது.

இதனைக் கண்ட பசுவை மேய்த்து வந்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதை கண்டான். கோடாரியால் பசுவை தாக்க முயற்சி செய்தான். கோடாரி தவறி புற்றுக் கொண்டிருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது, தன்னுடைய காயம் தீர மூலிகை தேடிய பெருமாள் ஆசிரமம் ஒன்றினை கண்டார்.

அது வராக மூர்த்தியின் ஆசிரமம் அங்கிருந்த பங்களாதேவி யசோதையாக பிறந்தவர் என சொல்லப்படுகிறது. தன்னுடைய பிள்ளையான பெருமாளின் முகத்தை கண்டவுடன் பாசத்தில் மூழ்கினார். பெருமாளும் அன்புடன் மகுளா தேவியை அம்மா என்றழைத்தார். மகளதேவி தன்னுடைய பிள்ளைக்கு சீனிவாசன் என்று பெயரிட்டார்.

தன்னுடைய பிள்ளையின் காயம் போக மருந்திட்டு பசி போக்கிட கனிகளை கொடுத்தார்.. இந்த சூழ்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாச ராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன்னுடைய குலகுரு சுகமாய் முனிவரின் ஆலோசனையின் படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.

யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில் படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு ஆகவே குழந்தைக்கு பத்மாவதி என்ற பெயரிட்டான்

ராம அவதாரத்தின் போது வேதவதி எனும் பக்தை ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தார். ராமனும் அவரிடம் பின்னாளில் அவளை மனம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கினார். அதனடிப்படையில், வேதவதி பத்மாவதியாகப் பிறந்தார் பிறந்து ஆகாசராஜனின் மகளாக வளர்ந்து வந்தார்.

பெருமாளுக்கும், பத்மாவதிக்கும், திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணத்திற்காக குபேரனிடம் கடன் பட்டு அந்த கடனை இன்று வரையிலும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது வரலாறு. அதன் பிறகு சீனிவாச பெருமாள் கலியுகம் முடியும் வரையில் திருமாலின் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

சோழ மன்னன் தொண்டைமான் தேவ லோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமானுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். பத்மாவதி அலமேலு மங்காபுரத்தில் அருளாட்சி செய்து வருகிறார். சீனிவாச பெருமாள் நாள்தோறும் திருச்சானூர் வந்து தங்கி விட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஒரு ஐதீகம் நிலவி வருகிறது.

கோவில் அமைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் 3 பிரகாரங்களை கொண்டது இந்த கோவிலில் இருக்கின்ற ரங்க மண்டபம் இஸ்லாமியர்களின் தாக்குதலிலிருந்து ரங்கநாதர் கோவிலை காக்க ரங்கநாதரை திருப்பதியில் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது என்கிறார்கள்.

திருப்பதி கோவிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது, இதில் பிரதம மண்டபம் அரங்கம் மண்டபம், திருமலைராய மண்டபம், சாலுகா நரசிம்ம மண்டபம், உள்ளிட்டவை காணப்படுகின்றன.

விமான பிரதட்சனை பிரகாரம் என்பது 2வது பிரகாரம் இதில் திருமண மண்டபம, விமான வெங்கடேஸ்வரர் ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரகம் உள்ளிட்டவை இருக்கின்றன.

3வது பிரகாரம் வைகுண்ட பிரகாரமாகும் இது ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படுகிறது.

மூலவர்

மூலவரான வெங்கடாஜலபதி நின்ற கோலத்தில் இருப்பார் திருப்பதி மலைமேல் உரையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையார், வேங்கடநாதன் வெங்கடேசன், வெங்கடேஸ்வரன், சீனிவாசன், பாலாஜி, என்றெல்லாம் போற்றுவார்கள். பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்கு சூட்டிய பெயர் என்ன தெரியுமா? வெறுங்கை வேடன்.

பிரகார தெய்வங்கள்

வெங்கடாஜலபதி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவுடன் முக்கோடி பிரகாரத்திற்கு நாம் வந்து சேர்கிறோம். அந்த பிரகாரத்தில் விஷ்வக் சேனர் சன்னதி இருக்கிறது, இவர் 4 கரங்களைக் கொண்டவர். சங்கு சக்கரம் வைத்திருப்பார்.

வயதான ஆகம விதிப்படி பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் இவரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாஜலபதியின் கழுத்தில் இருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

பிரமோற்சவத்தின் போது இவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது, இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை உள்ளது. இவருடைய விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச் செல்லப்படுகிறது.

கோவையின் சிறப்பம்சம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைணவர்களின் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.

திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ஆனந்த நிலையம் என்று அழைக்கப்படுகிறது பெயருக்கு ஏற்ப வாழ்வில் ஒரு முறையாவது கண்டுவிட மாட்டோமா என்று திருமால் ஏங்கி தவிப்பவர்களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பல கோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வைப்பதும் இங்குதான் தங்க தகடுகளால் காணக் கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது ஆனந்த நிலையம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலிலிருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படுகிறது.

ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது, இதை தவிர மார்கழி மாத அர்ச்சனைக்கும் வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று திருப்பதியில் செயத்ரா பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவ பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றி பட்டை உள்ளிட்டவை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறும் என சொல்லப்படுகிறது.

எந்த சாத்வீக சாந்தமான தெய்வத்தின் திருவருட்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாயினும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த விதமான ஆயுதமும் கிடையாது.

அவர் நிராயுதபாணி அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்முடைய முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலமாக புஷ்பகரணியில் கலக்கிறது, ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நேரில் நின்றபடியே இரு கைகளிலும் நீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும் இது விசேஷ வழிபாடு என்று சொல்லப்படுகிறது.

திருப்பதி அலமேலு மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற கிராமத்தில் பருத்தியும் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தை சார்ந்த நெசவாளர்கள் இதனை பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.

Previous articleஅதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!
Next articleபட்டதாரி இளைஞர்களே இந்திய ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா? இதோ வெளியானது உங்களுக்கான அறிவிப்பு!