கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயர்ந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்ற போது போராட அனுமதி வழங்கியது யார்? பள்ளி சூறையாடப்பட்டது தவறான செயல் எனவும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். அதோடு பள்ளிக்கு ஏற்பட்ட இழப்பை அவரிடம் வசூலிக்க வேண்டும் எனவும், நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வு சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இந்த மனு மீதான விசாரணை ஆரம்பித்தவுடன் நீதிபதி சதீஷ்குமார் எழுப்பிய கேள்விகள் வருமாறு கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியது யார்? அங்கே படித்த மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 4500 மாணவர்கள் நிலை என்ன? இந்த நிலை பரிதாபத்திற்குரியது என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ என்று சந்தேகம் எழுகிறது இது போராட்டம் அல்ல சட்டத்தை யாரும் கையில் எடுத்து விட முடியாது அதற்கு அனுமதியும் வழங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் மேலும் மாணவர்களின் சான்றிதழ்கள் எரியூட்டப்பட்டதற்கு அந்த மாணவர்களுக்கு எந்த மாதிரியான நியாயம் வழங்கப்படும்? என கேள்வி எழுப்பி இருக்கிறார் நீதிபதி சதீஷ்குமார்.
உயிரிழந்த அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எங்களுக்கும் இல்லை ஆனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் என்னாவது? நீதிமன்றத்தில் வழக்கு நிறுவியல் இருக்கும்போது போராட்டம் எதற்காக நடத்தப்பட்டது? எதற்காக காவல்துறையினர் தனித்து நின்று போராடி இருக்கிறார்கள்.
யாருடைய கட்டுப்பாட்டிலும் காவல்துறையினர் இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது சட்டத்தை முறையாக அனுமதித்தீர்களா உளவுத்துறையின் சார்பாக காவல்துறையினருக்கு போதுமான தகவல் அனுப்பி வைக்கப்பட்டதா இதனை காவல்துறையினர் எப்படி கையாண்டார்கள் மூன்று நாட்களாக காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என சரமாரியான கேள்வியை தொடுத்திருக்கிறார் நீதிபதி சதீஷ்குமார்.
சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக காவல்துறையினர் ஏன் கவனக்குறைவாக இருந்தார்கள்? தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறிவிடக்கூடாது, இது போன்ற வன்முறை பல மாணவர்களின் வாழ்வை பாதிக்கும் இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று சிறப்பு காவல் படையினர் கண்டுபிடிக்க வேண்டும்.
அதோடு அவர்களை கைது செய்வதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வன்முறை எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல மறுபடியும் வன்முறை நடைபெற்றால் இரும்புக்கரம் கொண்டு காவல்துறையினர் ஒடுக்க வேண்டும். வன்முறை சம்பவத்தை நீதிமன்றம் கண்காணிக்கும் வன்முறையாளர்களை கைது செய்து பள்ளியில் உண்டான சேதங்களை வசூலிக்க வேண்டும், இயற்கைக்கு மாறான மரணங்கள் பள்ளியில் நடைபெற்றால் போதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி சதீஷ்குமார் கூறியிருக்கிறார்.
மாணவியின் உடற்கூறாய்வு செய்ததில் தகுதி இல்லாத மருத்துவர்கள் ஈடுபட்டார்கள் என்று யாராலும் கூறி விட முடியாது மறுபடியும் உடற்கூறு ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வழங்குகிறோம். மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள், மனுதாரர் உடற்கூறாய்வு நடத்தும் போது உடனிருக்கலாம். அவருடன் அவருடைய வழக்கறிஞரும் பங்கேற்கலாம். இந்த உடற்கூறாய்வு வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
அதோடு உடற்கூறாய்வு முடிந்த பிறகு முடிவை ஏற்றுக்கொண்டு மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும். இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த மாணவியின் இறுதிச்சடங்கு அமைதியான முறையில் நடத்துவதற்கு காவல்துறையினர் தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் தெரிவிக்கும்போது யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது எனவும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.