கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்! விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி காவல்துறை!

0
135

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருக்கின்ற கணியமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் அவருடைய மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் தனியார் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது.

பள்ளி வாகனங்கள் மாணவ மாணவியரின் சான்றிதழ்கள் முடித்துவிட்டு இருக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து 350 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த வடக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை தொடர்ந்து இந்த வழக்கை சிவிசிஐடி விசாரணை மேற்கொள்ளும் என்று மாநில உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி தெரிவித்தார்.

அதன் பிறகு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான காவல்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய விசாரணையை தொடங்கினர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் சிபிசிஐடி காவல்துறையினர்.

Previous articleகள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! மெரினாவில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்!
Next articleதமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! எதிர்க்கட்சித் தலைவர் ட்விட்டர் பதிவு!