இங்கிலாந்து பிரதமர் தேர்தல்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை!

Photo of author

By Sakthi

இங்கிலாந்து நாட்டில் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளே கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து பிரதமர் பதவிக்கு வருவதற்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தார்கள் இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 4வது சுற்று வாக்கெடுப்பு நேற்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் உள்ளிட்ட 4 பேர் களத்தில் இருக்கிறார்கள். இதில் 118 வாக்குகளை பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்திருக்கிறார். அதோடு மோர்டாண்ட் 92 வாக்குகளையும், டிரஸ் 86 வாக்குகளையும், பெற்றார்கள். 59 வாக்குகளை மட்டுமே பெற்ற கெமி வெளியேறினார்.

இந்த நிலையில், கடைசி 2 வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இன்று மறுபடியும் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதனையடுத்து வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் கட்சியின் 1,60000 உறுப்பினர்கள் வாக்களித்து பிரதமரை தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது. இதில் ரிஷி சுனக்குக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.