சொந்த கிராமத்திற்கு வந்தது மாணவி ஸ்ரீமதியின் உடல்! ஊர்மக்கள் கண்ணீர் மல்க மாணவிக்கு அஞ்சலி!

0
157

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசவுர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி இவருக்கு வயது 17 இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இருக்கின்ற சக்தி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கு நடுவே அவருடைய இறப்பு குறித்து பள்ளியின் நிர்வாகம் சார்பாக ஸ்ரீமதி விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் பள்ளி நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை அவருடைய இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிவித்து போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் கடந்த 17ஆம் தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் மிகப்பெரிய வன்முறையில் முடிவடைந்தது. மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

இதற்கு நடுவே மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து அவருடைய உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்தார்கள். இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஸ்ரீமதி உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் மாணவியின் மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது, இந்த விசாரணை என்பது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு அவருடைய பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்கள்.

ஆனால் அதற்கு முன்பாக உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால் காவல்துறையினர் மூலமாக பெற்றோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை அவருடைய பெற்றோர் இன்று காலை பெற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில், மாணவி ஸ்ரீ நதியின் உடல் அவருடைய சொந்த ஊரான பெரிய நெசலூரில் இருக்கிற அவருடைய வீட்டிற்கு தற்போது கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அங்கே வைக்கப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அவருடைய பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில், அஞ்சலிக்குப் பிறகு மாணவி ஸ்ரீமதியின் உடல் கிராமத்தில் இருக்கின்ற இடுகாட்டில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது

Previous articleபரபரப்பான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி… சதத்தை தவறவிட்ட தவான்!
Next article“எல்லாம் பாத்துட்டேன்… ஆனா நிம்மதி இல்லை”- ஆன்மீக நிகழ்வில் ரஜினி பேச்சு!