மத்திய அமைச்சரின் கருத்தில் இருக்கும் உண்மை தன்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழக எம்பிக்கள்! அண்ணாமலை காட்டம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாக தமிழகத்தின் பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். .

தலைநகர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல 9 கோடி பேர் பயன்படுத்தும் உஜ்வாலா சிலிண்டர் விலை குறைப்பின் மூலமாக பொதுமக்கள் பயனடைந்திருக்கிறார்கள். 4.07 சதவீதம் நிதி பகிர்வு வருகிறது என தமிழக நிதி அமைச்சர் தெரிவிக்கிறார். 39.750 கோடி தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது, அது தொடர்பாக எதுவும் பேசவில்லை.

உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தை விடவும் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருக்கிறது .ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரைகளும் ஒரு மனதாக ஏற்ற பிறகு தான் வரி அமலுக்கு வந்தது. மாநில நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு தமிழக அரசை பொருத்தவரையில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே மத்திய நிதியமைச்சர் தெரிவித்த கருத்துக்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் நேற்றைய தினம் நாடாளுமன்றத்திலிருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

அத்தோடு அத்தியா நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்களில் இறக்கம் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில், தமிழக எம்பிக்கள் இருக்கிறார்கள். ஆகவே தான் மத்திய அமைச்சரின் கருத்துக்களை கேட்காமல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் திரு. அண்ணாமலை.