பரபரப்பு! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்க துறையினர் இன்று திடீர் சோதனை!

0
192

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் திரைப்பட தயாரிப்பாளர் அன்பு செழியன் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். அவர் தொடர்பான இடங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை இன்று நிறைவு பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இன்று சென்னையிலிருக்கின்ற பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் செய்து வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தனர். இதுகுறித்து சென்னையில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையானது 40க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு சில முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமான பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் இதுவரையில் அந்த முக்கிய பிரமுகர்கள் யார், யார், என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் விசாரணையின் முடிவில் தான் அந்த முக்கிய பிரபாகங்கள் யார், யார், என்று தெரியவரும் என சொல்லப்படுகிறது.

Previous articleதொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!
Next articleவாகன ஓட்டுநர்களுக்கு வெளியான நற்செய்தி! இனி டோல்கேட்டில் கட்டணம் கிடையாது!