இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள்!

0
230

மேஷம்

இன்று தாங்கள் காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு காலை சமயத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள், தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சுப உதயம் உண்டாகும் நாள், அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று. அனுபவசாலிகளின் ஆலோசனைகள் சரியான சமயத்தில் கைகொடுக்கும், ஆரோக்கியத் தொல்லை நீங்க மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள், பயணம் மூலமாக பலன் கிடைக்கும், எதிர்கால நலன் கருதி திட்டம் ஒன்றை வகுப்பீர்கள். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும், வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

சிம்மம்

இன்று தாங்கள் சொல்லை செயலாக்கி காட்டும் நாள், அடுத்தவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும்.

கன்னி

இன்று தாங்கள் அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், அரைகுறையாக நின்ற பணிகள் உள்ளிட்டவற்றை மீண்டும் ஆரம்பிப்பீர்கள். வியாபாரத்திலிருந்து வந்த மறைமுக போட்டிகள் நீங்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமான முடிவிற்கு வரும்.

துலாம்

இன்று தங்களுக்கு நண்பர்களால் நற்காரியங்கள் நடைபெறும் நாள். நெடுநாளைய நோய் நீங்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்லதொரு முடிவுக்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், நேற்றைய சேமிப்பு இன்று கை கொடுக்கும், கொள்கை பிடிப்பை சற்றே தளர்த்திக் கொள்வீர்கள். தினசரி நடைபெறும் பணிகள் நன்றாகவே அமையும்.

தனுசு

இன்று தங்களுக்கு அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். பரிமாற்றத்திலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும், வியாபார வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவார்கள், மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மகரம்

இன்று தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள், முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாரிசுகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள், பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடைகிறீர்கள். தொழிலில் வகுத்த திட்டங்களால் லாபம் அதிகரிக்கும் தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மீனம்

இன்று தங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உடன் பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்தினைவார்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் தொழில் சீராக நடக்கும்.

Previous articleசனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleவரலட்சுமி விரதம் தரும் அபூர்வ பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here