வங்கக் கடலில் நாளைய தினம் புதிய கட்டடத்தை ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
அதேபோல நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ததற்கான வாய்ப்பிருக்கிறது. மேலும் நாளை முதல் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. என்று கூறப்பட்டுள்ளது சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில சமயங்களில் லேசான மழை பெய்யும் என்றும், கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கின்ற நிலையில், வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும்.
இது வலுவடைந்து வங்க கடலின் வடமேற்கு மாநிலங்களில் கனமழையை பெய்ய வைக்கும் நேற்று காலை நிலவரத்தினடிப்படையில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.
சின்னக்கல்லார் பகுதியில் 19 சென்டிமீட்டர் மழையும், தேவாலா பகுதியில் 18 சென்டிமீட்டர் மழையும், மேல் பவானி பகுதியில் 14 சென்டிமீட்டர் மழையும், சோலையாறு பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், திருவண்ணாமலை பகுதியில் 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும், ஆகவே மீனவர்கள் அங்கே வரும் ஒன்பதாம் தேதி வரையில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.