தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு காத்திருக்கும் கனமழை!

0
140

தமிழக முழுவதும் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகின்ற 18ஆம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நீர்த்தேக்க அணைகள் நிரம்பி வருகின்றன. சில இடங்களில் தண்ணீர் புகுந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கின்ற ன மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது அதிகபட்சமாக 36 டிகிரி வெயில் தாக்கம் இருக்கும் நேற்று காலை நிலவரத்தினடிப்படையில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. ஆந்திர கடலோரம் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது ஆகவே மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த மத்திய பாதுகாப்பு மந்திரி…
Next articleசுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரயில் வழங்கிய புதிய திட்டம்! இது மட்டும் இருந்தால் போதும் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்?