உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சார்ந்த பிரிஜ்பால் சசி பிரபா தம்பதியினருக்கு அமர், லஷ், என்ற இரு மகன்களும் ஜோதி, அனுராதா, என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அமர் தன்னுடைய தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனாலும் சொத்தை பிரிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உனக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று மகனிடம் அவர் கூறியதாக தெரிகிறது.
அதோடு மட்டுமல்லாமல் சொத்து பத்திரத்திலிருந்து அமரின் பெயரையும் பிரிஜ்பால் நீக்கியுள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டிலிருந்த தந்தை மற்றும் சகோதரரை அமர் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.
இந்த கொடூர கொலை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சசி பிரபா இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கியிருக்கிறார். அதன்பிறகு அங்கு வந்த காவல்துறையினர் சடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு தலைமறைவான அமரை மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.