இந்த 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
90

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் காலை சமயத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசானதும் முதல் மிதமான மழை வரையில் செய்வதற்கான வாய்ப்புள்ளது.

கோவை, திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, தேனி, தர்மபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது மற்ற மாவட்டங்களில் நாளை முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரத்தினடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு மற்றும் கலசப்பாக்கத்தில் 4 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. செங்கம், அவலாஞ்சி, பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டிமீட்டர் வரையும், செம்பரம்பாக்கம், திருவண்ணாமலை, ஆத்தூர், சென்னை விமான நிலையம் மற்றும் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழையும், பதிவாகியுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.