ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா? வெளியான முக்கிய தகவல்!

0
199

கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிரிழப்பு தொடர்பாக இருக்கும் மர்மத்தை விசாரிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்களின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது.

இந்த நிலையில் விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில், இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட வருடம் விசாரணை நடத்திய நிலையில், ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி விசாரணை நிறைவு பெற்றது. ஒட்டுமொத்தமாக 159 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சற்றேற குறைய நான்கு மாதங்களாக அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வந்தது இந்த ஆணையம் விசாரணையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவைச் சார்ந்தவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பங்கேற்றார்கள். அவர்கள் அறிக்கை வழங்குவதில் தாமதம் உண்டானது, ஆகவே இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இந்த விசாரணை ஆணையத்தின் பதவி காலத்தை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்தது. கடந்த வாரம் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வழங்கிய நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து விசாரணையின் இறுதி அறிக்கையை வழங்கவுள்ளதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleசென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை!
Next articleஉங்கள் சீட்டு இங்கே செல்லாது! எடப்பாடி பழனிச்சாமிக்கு மிரட்டல் விடுத்த கோவை செல்வராஜ்!