பாஜகவில் மீண்டும் இணைந்த பிரபலம்! கமலாலயத்தில் நடைபெற்ற கட்சியினைப்புவிழா!

Photo of author

By Sakthi

கடந்த 2020 ஆம் வருடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சியை தொடங்குவதாக அறிவித்தபோது அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த கொங்கு மண்டலத்தைச் சார்ந்த அர்ஜுன மூர்த்தியை தன்னுடைய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் அறிவித்தார்.

இந்நிலையில், ரஜினியின் கட்சியில் பொறுப்பேற்கவிருப்பதால் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார். அர்ஜுன மூர்த்தி அந்த சமயத்தில் ரஜினியின் கட்சியில் தலைமை பொறுப்பு இவரிடம் கொடுக்கப்பட்டதால் அனைவரின் கவனமும் இவர் மீது திரும்பியது.

அதன் பிறகு நோய் தொற்று பரவல் காரணமாக, கட்சி ஆரம்பிக்கும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டதால் அர்ஜுன மூர்த்தி அதன் பிறகு கடந்த 2021 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். அவர் கட்சி தொடங்கியதற்கு ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது தன்னுடைய இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை பாஜகவுடன் இணைந்திருக்கிறார் அர்ஜுன மூர்த்தி. சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்து தன்னுடைய கட்சியை பாஜகவில் இணைத்திருக்கிறார் அர்ஜுன மூர்த்தி.

ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக காணப்படும் இவர் பாஜகவில் இணைவதற்கு முன்பாக திமுகவில் இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு தான் பாஜகவில் இணைந்திருக்கிறார். இவருடைய மனைவி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது.