நாகையில் இரவு நேரத்தில் இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த கனமழை! வீட்டுக்குக்கூரை இடிந்தது!

Photo of author

By Sakthi

நாகப்பட்டினத்தில் நேற்று மந்திரம் இரவு 3 மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த மழையில் சுனாமி குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மீனவ குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர்.

நாகப்பட்டினம் நம்பியார் நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 890 குடும்பத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சி அலுவலகம் எதிரில் தொண்டு நிறுவனங்கள் சார்பாக நிரந்தர குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டனர்.

வருடம் தோறும் வீடுகளில் மழை நீர் புகுந்து சாலைகளில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பெரும்பாலான வீடுகள் பராமரிப்பின்றி மேற்கூரை, சிமெண்ட் கூரைகள். பெயர்ந்து விழுவது வழக்கம் என சொல்லப்படுகிறது.

ஆகவே வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என தெரிவித்து அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சார்ந்த மக்கள் தெரிவித்ததாவது, சுனாமியில் உயிர் பிழைத்த நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டனர்.

ஒப்பந்தத்தினடிப்படையில், கட்டப்பட்ட வீடுகள் தரமற்ற முறையில் மக்கள் நிம்மதியாக குடியிருக்க வாய்ப்பற்றதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் உயிர் பயத்திலேயே வாழ்ந்து வருகிறோம், அரசு ஆய்வு செய்து அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.