கிருஷ்ணரின் கையில் வைத்திருக்கும் சுதர்சன சக்கரத்தின் மகிமை என்னவென்று தெரியுமா?

0
150

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கையிலிருக்கின்ற சுதர்சன சக்கரம் பல மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றலை யாராலும் அளவிட்டு கூற முடியாது, சுதர்சன் என்றால் மங்களகரமானது என்று பொருள். சக்ரா என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று பொருளாகிறது. அனைத்து ஆயுதங்களை விடவும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

சாதாரணமாக, சுதர்சன சக்கரம் கிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும், ஆனால் விஷ்ணு ஆள்காட்டி விரலில் அதனை வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும் ஆள்காட்டி விரலில் வைத்து தான் சுதர்சன சக்கரத்தை ஏவுவார்.

எதிரிகளை அழித்த பிறகு சுதர்சன சக்கரம் மீண்டும் அதன் இடத்திற்கு திரும்பி விடுகிறது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கிறது.

எந்த விதமான அழுத்தமுமில்லாத சூனியப் பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரம் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் சென்று விடும்.

சுதர்சன சக்கரம் செல்லும் வழியில் ஏதாவது தடை உண்டானால் சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கும். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை.

சுதர்சன சக்கரத்தின் உருவம், வடிவம், உள்ளிட்டவை எப்படிப்பட்டதென்றால் சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக் கூடியது, அதேநேரம் இந்த பிரபஞ்சமளவு பறந்து விரிந்தது என சொல்லப்படுகிறது.

Previous articleKanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? 
Next articleசென்னையில் வேலை பார்க்க விருப்பமா இதோ உங்களுக்கான ஒரு சூப்பர் வாய்ப்பு! உடனே முந்துங்கள்!