துடிப்பான இந்தியா திட்டத்தின் கீழ் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்ற பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 15000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒரு வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு முகாமல் இருக்க வேண்டும் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 75,000 11 ,12 உள்ளிட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1,25,000 கல்வி உதவி தொகையாக வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் yasasvi நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள், கணினியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதியான இன்று கடைசி நாளாகும். 31ஆம் தேதி வரையில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு 11ஆம் தேதி தேர்வு நடைபெறும். அதோடு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.