வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி வழங்கிய மத்திய அரசு! 1ம் தேதி முதல் உயர்கிறது கட்டணம்!

Photo of author

By Sakthi

சுங்கச்சாவடிகளில் வருடம் தோறும் சுங்க கட்டணம் அதிகரிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான சுங்க கட்டண உயர்வு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்படவிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 50 சுங்கசாவடிகளில் 22 சுங்க சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

கார்,வேன், ஜீப், உள்ளிட்டவைகளுக்கு ஐந்து ரூபாயும் ட்ரக் பேருந்து மற்றும் பல அச்சு கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையில் கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது
.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி, திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர், வளவாசி, வேலஞ்செட்டியூர் தஞ்சை, வாழவந்தான் கோட்டை, விருதுநகர், புதூர், பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஓமலூர், நத்தக்கரை, வைகுண்டம், வீரசோழபுரம், சேலம் மேட்டுப்பட்டி திண்டுக்கல், கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, மரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, உட்பட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.