காங்கிரஸ் கட்சிக்கு சுதந்திரமில்லை! மறைமுகமாக கூட்டணி கட்சியைச் சாடிய காங்கிரஸ் எம்.பி!

0
138

ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, குலாம் நபி ஆசாத் உட்பட கட்சியை விட்டு எந்த ஒரு தொண்டன் சென்றாலும் அது பின்னடைவு தான். காமராஜரை போல ஒருவர் தோன்றினால் தான் காமராஜர் ஆட்சி அமைய முடியும். நாட்டில் இந்தி, இந்துத்துவா கொள்கை சற்று வேரூன்றி இருக்கின்றன என தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.

இந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து நாங்கள் வைக்கும் பிரச்சாரம் இப்போதைக்கு ஈடுபடவில்லை. எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திரளவில்லை, தமிழகத்தில் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் அவருடைய இந்த கருத்துக்கள் ஆளும்கட்சியான திமுகவை மறைமுகமாக விமர்சிப்பதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி எனவும், அவருடைய கருத்துக்கள் மூலமாக தெரிய வருகிறது.

தேர்தல் என்று வந்து விட்டால் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்துத்துவா கொள்கையை தூற்றும் விதமாகத்தான் காங்கிரஸ் கட்சியும், திமுகவும், பிரச்சாரம் செய்யும் என்பது அனைவரும் அறிந்தது தான்.

Previous articleபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அந்த பொருட்களை விற்ற வாலிபர்கள்! ஐந்து பேர் கைது !
Next articleஇந்த மாவட்டத்தில் வரும் 4ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்! யாரும் மிஸ் பண்ணாதீங்க!