வட தமிழக பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, காரைக்கால், புதுவை, பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.
கோயமுத்தூர், நீலகிரி வெள்ளிக்கிழமை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும் தேனி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தென்காசி, போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது .
சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் காங்கேயம் பகுதியில் 8 சென்டிமீட்டர் மழையும் திருப்பூர், ஆவடி, சூலூர், பண்ருட்டி, ராசிபுரம், வானமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் தல 7 சென்டிமீட்டர் மழையும், பதிவாகியுள்ளது