தமிழக மக்களே ஜாக்கிரதை! இன்று பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

0
119

தமிழக பகுதிகளின் மேல் நிறைவேறும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், போன்ற இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, தென்காசி, கரூர், நாமக்கல், திருச்சி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல நாளைய தினம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் தலைநகர் சென்னையில் பொறுத்த வரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மாலத்தீவு, லட்சத்தீவு, உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென் கிழக்கு அரவை கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்புள்ளது. என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கும் விண்வெளிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Previous articleஇனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
Next articleஇந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி!