மிகப்பெரிய நம்பிக்கை உரியவரை இழந்து விட்டோம்! பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

0
106

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக, நேற்று இரவு 11 மணியளவில் காலமானார் என்று அரண்மனை வட்டாரம் அறிவித்தது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்து நகரில் பால் மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக, உண்டாகும் உடல் நலக் கோளாறுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளனர். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த ராணியின் மகனும் பிரிட்டன் இளவரசருமான சார்லஸ் அவருடைய மனைவி கமிலா உள்ளிட்ட ராணியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பால் மோர் கோட்டைக்கு வருகை தந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு இந்திய நேரப்படி 11.05 மணி அளவில் அவர் காலமானதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவித்தனர்.

இரண்டாம் எலிசபெத் வாழ்க்கை வரலாறு

கடந்த 1926 ஆம் வருடம் பிறந்த இரண்டாம் எலிசபெத் பிரிட்டன்  ராணியாக அரசு பணியை ஏற்றுக்கொண்டு 70 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன 96 வயதாகும் அவர் பிரிட்டனின் நீண்ட காலம் அரசு பணியில் இருந்த சாதனையை கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் புரிந்தார். தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 1927 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் 70 ஆண்டு 126 நாட்கள் அரசராக பணிபுரிந்தார்.

அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபத் முறியடித்து உலகிலேயே மிக நீண்ட அரசு பணியிலிருந்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார். பிரான்சின் 14 ஆம் லூயிஸ் 1643 முதல் 1715 வரையில் 72 வருடங்கள், 110 நாட்கள் அரசராக இருந்து சாதனை பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

 

இந்த நிலையில், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். அதாவது, பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய மரியாதைக்கும்,நம்பிக்கைக்குமுரியவர். தன்னுடைய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தலைசிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார்.

புது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரிகத்தையும், கடைபிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை தருகிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்
Next articleஇந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!