அரசின் அலட்சியத்தால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்! நீதிபதிகள் வேதனை!

0
145

சீர் மரபினர் பிரிவை சார்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனதில் மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விடவும் பல மடங்கு அதிகமாக வசூல் செய்து வருகின்றன.

மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விசாரணை நடத்தி சட்டத்திற்கு புறம்பாக 12 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2022-23ம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு முதலில் விண்ணப்பிக்குமாறும் கட்டணத்தை பிறகு செலுத்தி கொள்ளலாம் என்பது போல கல்லூரி முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கல்லூரியில் தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தை வசூலித்து மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தற்போதைய சூழ்நிலையில் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுவது கட்டாயம். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களின் பின்புலத்தை பார்ப்பதில்லை.

மாணவர்களின் கல்வித் திறனையும், மதிப்பெண்ணையும், மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்கிறார்கள். மாணவர்களின் கல்வி செலவுகள் அனைத்தையுமே அரசே செலுத்துகிறது.ஆனால் இங்கே ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தார்கள்.

அதோடு தமிழகத்தில் இருக்கின்ற கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? எனவும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர் பதில் வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Previous articleபென்ஷன் வாங்குகிறீர்களா? எல்ஐசி வெளியிட்ட புதிய பாலிசி விவரம்! இனி ஒரே கூத்து தான் போங்க!
Next articleகட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம்