சௌபாக்கியங்களை அருளும் விநாயகர் விரதங்கள்

0
150

வருடம் தோறும் விநாயகருக்கான விரத தினங்கள் பெரும்பாலும் சதுர்த்தி என்றே அழைக்கப்படும். மேலும் சுக்கில பட்ச சதுர்த்தி, கிருஷ்ணபட்ச சதுர்த்தி எனவும், தெரிவிக்கப்படும் 2 சதுர்த்தி விரத தினங்கள் மாதம் தோறும் வருகின்றன. சுக்கில பட்ச சதுர்த்தியை சதுர்த்தி விரதம் என சொல்வார்கள்.

அதிலும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை நாகசதுர்த்தி என்றும், ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கிலபட்ச சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி எனவும், தெரிவிக்கிறார்கள்.

மாதம் தோறும் வருகின்ற கிருஷ்ணபட்ச சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி எனவும், தெரிவிக்கிறார்கள். பக்தர்களுக்கு வருகின்ற சங்கடங்களை விநாயகர் தீர்த்து வைக்கிறார் என்பதால் இந்த பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அந்த தினத்தில் விநாயகருக்கு பக்தர்கள் விரதமிருந்து வழிபட்டால் மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் தான் விநாயகர் பிறந்ததாக ஐதீகம். ஆகவே அந்த மாதத்தில் வரும் சுக்கிலபட்ச சதுர்த்தியும், கிருஷ்ணபட்ச சதுர்த்தியும், விசேஷமானவை என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் கூட விநாயகர் சதுர்த்தி விரதத்தை தான் மிகவும் விசேஷமான தினம் என்று சொல்லப்படுகிறது. சுக்கில பட்ச சதுர்த்தியன்று அதன் அதிபதியான தேவி, விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்றார் எனவும், சொல்லப்படுகிறது.

ஆகவே அந்த நாளில் அதே நேரத்தில் விநாயகரை விரதமிருந்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Previous articleசாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!!
Next articleசிறுநீர் வரும்போது எரியுதா? சிறுநீரக கல் அடைப்பு நீங்க! இதோ அற்புதமான நாட்டு மருத்துவம்!