காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தமிழ்நாடு முழுவதும் 51 பகுதிகளில் சீருடை அணிவகுப்பை ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தவிருக்கிறது. இது தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க்கிறார்கள்.
சென்ற 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர் எஸ் எஸ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் விஜயதசமியை முன்னிட்டு அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த வருடம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தமிழ்நாடு முழுவதும் 51 பகுதிகளில் சீருடையுடன் அணிவகுப்பு நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 51 இடங்களில் அணிவகுப்பை நடத்துவதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது அணிவகுப்பு நிறைவு பெறும் போது பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
அணிவகுப்பில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாக பாஜகவை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.