23 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

0
297

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் ஒரு சில தொகுதிகளில் லேசான மழை பெய்யும் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் திருச்சி, புடலூரில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 12 சென்டிமீட்டர் மழையும், பொன்மலை, திருச்சி போன்ற பகுதிகளில் 11 சென்டிமீட்டர் மழையும், துவாக்குடியில் 10 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கு பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும். ஆகவே நாளை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!
Next articleமத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here