பேனாவுக்கு அனுமதி வழங்கியதால் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது! தமிழக அரசு நெத்தியடி அடித்த சீமான்!

0
113

தமிழீழ விடுதலைக்காக 12 தினங்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்த திலீபன் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈகை சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அவர்களே தங்களுடைய வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திக் கொள்வது, தங்களுடைய வீடுகளில் குண்டு வீசி வெடிக்க செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது பாஜகவின் உறுப்பினர்கள் இல்லங்களில் உண்டாகும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்டிபிஐ அமைப்பைச் சார்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பதைப் போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ம் தேதி எந்த ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சார்ந்த கோட்சே காந்தியை கொலை செய்தாரோ, அதே ஆர்எஸ்எஸ் அமைப்பு காந்தியின் பிறந்தநாளன்று பேரணியை நடத்துகிறது.

நாம் தமிழர் கட்சியோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளோ ஒரு கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டால் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என்று தெரிவித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாது என்று தெரிவித்தும் பலமுறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.

ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்க்கும் விதமாக அரசு தரப்பு வழக்கறிஞர் பெரிதாக வாதிடவே இல்லை. அக்டோபர் 2 ம் தேதியன்று கிராம சபை கூட்டம் நடைபெறுவதால் காவலர்கள் அங்கே பாதுகாப்பு பணிக்கு சென்று விடுவார்கள். ஆகவே பேரணியை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வாதம் செய்துள்ளார்.

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளார் ஆர் எஸ் எஸ் பேரணி இறுதியில் மதக் கலவரங்களையும், வன்முறையையும் தூண்டுவதைப் போல பேசுவது தான் அதன் நோக்கமாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டினார்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆட்சி காலத்தில் கூட ஆர்எஸ்எஸ் பேரணிகள் தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசிற்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பாஜக அனுமதி வழங்கியது, அதற்கு பதிலாக தான் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு தற்போது இவர்கள் அனுமதி வழங்குகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.