பென்ஷன் வாங்குகிறீர்களா அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்காக தான்! எல்லா ரூல்ஸும் மாறிப்போச்சு!

0
144

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரிலான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களின் சந்தா பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டிய பிறகு அவருக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையில் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் 2022 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய அனுமதி கிடையாது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டது.

அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அல்லது அதற்குப் பிறகு இணையும் சந்தாதாரர்கள் வருமான வரி செலுத்த தகுதியானவர் என்று கண்டறியப்பட்டால் அல்லது விண்ணப்பிக்கும் தேதிக்கு முன்னர் தெரிய வந்தால் APY கணக்கு மூடப்பட்டு இன்று வரையில் திரட்டப்பட்ட ஓய்வூதிய செல்வம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். வாரி செலுத்துவோர் என கண்டறியப்பட்டு அவர் அடல் பென்ஷன் யோஜனாவில் கணக்கு வைத்திருந்தால் அந்த கணக்கு உடனடியாக மூடப்படும்.

இது முழுக்க முழுக்க ஏழை எளிய மக்கள் ஓய்வூதிய திட்டம் ஆகும் ஆகவே குறைந்தபட்ச வருமான வரி செலுத்துவோர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதனால் தங்களுக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைந்த பிறகு வருமான வரி செலுத்தினாலும் அந்த கணக்கு முடக்கப்பட்டு பணம் திருப்பி செலுத்தப்படும் 40 வயதுடைய நபர்கள் இணையலாம். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தபால் அல்லது வங்கி கிளைகள் மூலமாக இந்த திட்டத்தில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleமீண்டும் வந்துவிட்டாரா நித்தியானந்தா:? ஆசிரமம் இடிப்பு!! பல்லடம் அருகே பெரும் பரபரப்பு!
Next article“தினேஷ் கார்த்திக்கால் எனது இடத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல…” சூர்யகுமார் யாதவ் ஜாலி!