இங்கிலாந்தில் காத்திருக்கும் நர்சிங் வேலை! யாரெல்லாம் முயற்சி செய்யலாம்?

Photo of author

By Sakthi

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இணையதளத்தில் பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களுக்கு ஸ்டாப் நர்ஸ் காண வேலைவாய்ப்பு லண்டனில் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் காலியிடங்களை நிரப்புவதற்கான தகுதிகள் தொடர்பாகவும் விவரங்கள் வெளியாகி உள்ளது.

தகுதி – பிஎஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம் – மருத்துவத்தில் குறைந்தது ஒரு வருட அனுபவம்.

பாலினம் – ஆண், பெண் இருவரும் விண்ணப்பம் செய்யலாம்.

மற்ற தகுதிகள்

OETயில் படித்தல், பேசுதல் மற்றும் கவனிப்பதில் B க்ரேடும், எழுதுதலில் C+ கிரேடும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IELTS யில் படித்தல், கவனித்தல் பேசுதலில் உள்ளிட்டவற்றில் 7 மதிப்பெண்களும் எழுதுதலில் 6.5 மதிப்பெண்களும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள நர்சிங் மாணவர்கள் அல்லது பணி புரிபவர்கள் கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யலாம்.

omcmanpower.com/regformnew/registration