அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை எனவும் மக்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருவதன் மூலமாக பாஜகவை சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது எனவும் பாஜகவின் துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
திமுகவை விரட்டுவதற்கு எல்லா கட்சிகளும் ஒன்றிணைைய வேண்டும். அதிலும் அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட இருவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள ஆலந்தூரில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட கட்சி சார்பாக சக்தி கேந்திர கூட்டம் நடந்தது. அதில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பங்கேற்றுக் கொண்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் வரும் 9ம் தேதி மண்டல ஆய்வு கூட்டம் நடக்கிறது.
எதிர்வரும் 13 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை ஆனாலும் அவர்களை விட பல மடங்கு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக போராட்டம் நடத்திக் கொண்டுள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என்று எந்த ஒரு விவகாரத்திலும் மாநில உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்று பாஜக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் கூட மக்களுக்கு குரல் கொடுப்பதில் பாஜக அதற்கு இணையாக செயல்பட்டு கொண்டுள்ளது ஆகவே பாஜகவை சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் நாகராஜன்.
திராவிட மாடல் ஆட்சி என்று தெரிவித்துவிட்டு மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல் பட்டு கொண்டுள்ளது. திமுகவை வீழ்த்த எல்லா கட்சிகளும் ஓரணியில் ஒன்றினைய வேண்டும். திருமாவளவனுக்கு பாஜகவை எதிர்ப்பது தான் ஒரே வேலை தூங்கி எழுந்தவுடன் பாஜகவை எத்தனை முறை திட்டுவது என்பதில் அவர் குறியாக இருந்து வருகிறார்.
வெற்றிமாறன் சினிமா படம் எடுப்பதை விட்டுவிட்டு திமுகவிற்கும் ,விடுதலை சிறுத்தை கட்சிக்கும் வக்காலத்து வாங்குவது சரியானதா? என்று கேள்வி எழுப்பிய அவர், மணிரத்தினம் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளார். அதனை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.