திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர்.
அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதன் பிறகு தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர்.
அதாவது தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான நிலைக்கு வருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அந்த இடத்திற்கு வந்திருக்கும் கனிமொழிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
ஆனால் அதே சமயம் இது வாரிசு அரசியல் அடையாளம் ஆகிவிடுமோ என்று மக்கள் மனதில் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஏனென்றால் அண்ணன் தலைவர், தங்கை துணை பொது செயலாளர் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்சியில் இப்படி வரும்போது வாரிசு அரசியல் என்று பலரும் நினைக்கக்கூடும். எப்படி இருந்தாலும் ஒரு பெண் பதவிக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். இவருடைய பேச்சுக்கு திமுகவினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆவடியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் பத்திகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில், பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளனர். ஆகவே குடும்ப அரசியல் தொடர்பாக பேச அவருக்கு எந்த விதமான தகுதியும் இல்லை திமுகவினர் ஒரே கொள்கை உடையவர்கள். ஆகவே ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஒரே கட்சியில் பதவிக்கு வருவதில் எந்த விதமான தவறும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் சோதனை காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி கட்சிக்காக சிறை சென்றவர் கனிமொழி அப்படி கட்சிக்கு கடுமையாக உழைத்த கனிமொழிக்கு தான் துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது. கட்சியில் இருக்கின்ற எல்லோரும் ஒரே கொள்கையை தான் பின்பற்றுகிறார்கள் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் எந்த விதமான தவறுமில்லை என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.