காஷ்மீரில் சட்டவிரோத பண பரிமாற்றம்! அதிரடியில் இறங்கிய என் ஐ ஏ!

0
154

ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் சோபியான், பூஞ்ச் மற்றும் ராஜோரி போன்ற மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

பி எஃப் ஐ அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்று அறிவித்திருக்கின்ற மத்திய உள்துறை அமைச்சகம், அந்த அமைப்பையும் அதன் துணை அமைப்புகளுக்கும் ஐந்து வருட காலம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணத்தேவை உண்டானது. பயங்கரவாதத்தை பரப்ப பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கொண்டு வரப்படுகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஒரு வருட காலமாக இந்த முழு நெட்வொர்க்கையும் பாதுகாப்பு முகமைகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. அதோடு பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கின் சோபியான், பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்று தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

Previous articleகுட் நியூஸ்:! ஏறிய வேகத்தில் குறையும் தங்கத்தின் விலை!! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!
Next articleசிதம்பரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடைகள் தாலி கட்டிய விவகாரம்! வீடியோ எடுத்த நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்!