பிரிட்டன் மன்னர் முடி சூட்டு விழா! கோகினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா கமிலா சார்லஸ்?

0
172

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த வருடம் மே மாதம் ஆறாம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார். இந்த நிலையில் அந்த நாட்டின் அரச குடும்பத்தில் ராணியார்கள் அணியும் கிரீடம் புகழ்பெற்றது. ஒட்டு மொத்தமாக 2800 வைரங்கள் மற்றும் உலகிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் 105 காரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டது தான் இந்த கிரீடம்.

இந்த வைரம் பதித்த கிரீடத்தை கடைசியாக 1937 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் ஜார்ஜின் மனைவி அணிந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசு தொடர்ந்து உரிமை கூறி வருகிறது இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவின்போது கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை கமிலா அணிவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே இதற்கு பாஜக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவரின் பேட்டியும் இடம் பெற்றுள்ளது.

ராணியின் மரணம், புதிய மன்னர் முடி சூட்டுதல், கோகினூர் வைரம் உள்ளிட்டவற்றால் பழைய காலணி ஆதிக்க கசப்பான நினைவுகள் இந்தியர்களிடையே எழுந்துள்ளது. என்று பாஜக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முடிசூட்டும் விழாவின் போது கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவதை கமிலா தவிர்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Previous article“எப்போதுமே அவர்தான் எனது ஆதர்ஸம்…” முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்த சீக்ரெட்
Next articleஅடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!