கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அந்தியூரில் இருக்கின்ற பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய வேசார்ந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புஉள்ளது.
அதேபோல நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் கனமழை காரணமாக அந்தியூர் வட்டத்தில் இருக்கின்ற தொடக்க மற்றும் நடுநிலை உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக, அந்தியூரில் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. வெள்ளம் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.