தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

0
173

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் வருடம் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் அந்த வருடத்தின் மே மாதம் 22 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறையினர் பரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதோடு பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வது அந்த அறிக்கை நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னரே போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் மெகா போன் மூலமாக எந்த எச்சரிக்கையும் காவல்துறையினர் தரப்பில் செய்யப்படவில்லை. இது எதுவுமே இல்லாமல் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது.

அதோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் தாசில்தார்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு இருக்கு எந்த விதமான உயர் அதிகாரிகளின் அனுமதியும் இல்லாமல் தாங்களாகவே அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று பாத்திமா நகர் லைன்ஸ் நகர் திரேஸ்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கின்ற எஸ் வி ஏ பள்ளி மைதானத்திற்கு கோட்ட கலால் அலுவலர் சந்திரனும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மற்றும் மடத்தூருக்கு மண்டல துணை தாசில்தார் கண்ணனும் நியமனம் செய்யப்பட்டனர்.

மாவட்ட துணை ஆட்சியாளர் உத்தரவின்படி அங்கே அவர்கள் பணியமர்த்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜ்குமார் தங்க சிலனும் அதில் அடங்குவார். ஆனால் தங்கசீலம் தற்போது உயிருடன் இல்லை. அவர் இறந்துவிட்டார். தங்கசீலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொறுப்பாளராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கியதாக சேகர் என்பவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அதனடிப்படையில் தங்கசீலனின் தொலைபேசி அழைப்பு துப்பாக்கிச் சூடு தொடங்கும் வரை அவர் அப்பகுதியில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர் அப்போது மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட எழுத்தாளர்களுக்கு தகவல் வழங்கி கொண்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதே போல உயர் அதிகாரிகளின் உத்தரவு எதுவும் வழங்கப்படாமல் மடத்தூரில் இருந்து தினேஷ்புரத்துக்கு கண்ணன் சென்றதாகவும் அதேபோல எஸ் ஏ வி பள்ளி மைதானத்திற்கு நியமனம் செய்யப்பட்ட சந்திரன் சிறப்பு நிர்வாக மேஜிஸ்ட்ரேட் உத்தரவு பிறப்பித்ததன் மூலமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்து அவர் அண்ணா நகருக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் தலைமையகத்தின் எந்த விதமான உத்தரவும் இல்லாமல் தாசில்தார்கள் தங்களுடைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றியது ஏன்? என்பது தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் விளக்கம் கேட்டுள்ளார். இந்த நிலையில் தான் தாசில்தார்கள் வரம்பை மீறி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17bன் படி நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தர நிலை துணை ஆட்சியர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரையில் குறிப்பிட்ட தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது.

Previous article#Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரி உள்ளிட்ட 4 போலீஸார் சஸ்பென்ட்
Next article#CelebrityDiwali: இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்!