பண்டைய காலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதா? ஏன் எதற்காக?

0
136

தீபாவளி பண்டிகை என்பது மிகப் பழமையான பண்டிகை ஆகும்.வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் யட்சராத்திரி என்று குறிப்பிட்டிருக்கிறார். அமாவாசையை முன்னிட்டு இரவில் கொண்டாடப்படுகிறது. இதனை சுகராத்திரி என்றும் சொல்வதுண்டு.

விஷ்ணு புராணத்தில் தீபாவளி என்று விடையற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல பகுதிகளில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் வருடம் தோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளி பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று சொல்கிறது.

கிபி 1250 எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது தொடர்பான குறிப்பு காணப்படுகிறது.

தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை பழங்கால முதல்ல கொண்டாடப்பட்டு இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தீபாவளி என்றால் பொட்டாசு இனிப்பு வகைகள், சினிமா தற்போது புதிதாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் திரைப்படம் என, எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால் தீபாவளிக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது.

தீபாவளி கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணனின் லீலை தான் என்று பலரும் அறிந்திருக்கலாம். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசுரனை வீழ்த்தி வெற்றி பெறுகிறார் கிருஷ்ணன். இதனால் தோன்றியது தான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பிறகு கிருஷ்ணன் வெற்றி வீரனாக தடுக்க சகோதரியின் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தான் தீபாவளி தினத்தன்று எல்லோரும் நண்பர்கள் உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றியது என்று சொல்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல் நம்முடைய அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இருந்தும் பெயர்களும், கொண்டாடும் முறைகளும் சில மாற்றங்களை சந்தித்துள்ளனர்.

தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரூம் எகிப்து பாபிலோன் கிரேக்கம் பாரசீகம் என்று பல நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. அந்த வணிக தொடர்பின் போது இந்தியாவில் இருந்து சென்ற பல வணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார்கள்.

இவன் கரமாக அங்கும் இந்திய கலாச்சாரம் பரவத் தொடங்கியது. அதோடு இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும் வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.

மொகலாய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்ததாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

பட்டாசு வெடிக்கும் பழக்கமானது சந்தோஷத்தை குறிப்பதற்காக தொடங்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பண்டைய தினங்களில் இலை மற்றும் வெடி மருந்து கொண்டு பாட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அதன் பிறகு பட்டாசிலேயே பல வகைகளில் வந்து தற்போது வெடித்தது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை. வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு வெடிகள் மிகவும் நவீனமயமாகிவிட்டது.

Previous articleபூஜை பொருட்கள் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இவ்வாறு சுத்தம் செய்து பாருங்கள்!
Next articleஉங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்!