தீபாவளியை முன்னிட்டு சூடு பிடித்த தங்க நகை விற்பனை! விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!

0
140

நாட்டின் தீபாவளி வண்டியின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டி ஏற்படுகிறது தீபாவளிக்கு முந்தைய நாட்களான அக்டோபர் மாதம் 22, மற்றும் 23, உள்ளிட்ட நாட்களில் மட்டும் தங்கத்தின் விற்பனை 25 ஆயிரம் கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளனர்.

ஒட்டுமொத்த வர்த்தகம் 45 ஆயிரம் கோடி எனவும், அதில் தங்கம் மட்டும் 25 ஆயிரம் கோடி எனவும், மற்ற பொருட்களின் விற்பனை 20000 கோடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2 தினங்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே 25 ஆயிரம் கோடி விற்பனையானது மிகப்பெரிய சாதனை என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் தங்கத்தின் தேவை சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், நோய் தொற்று பாதிப்புக்கு பிறகு தங்கத்தின் வர்த்தகம் முழுமையாக மீண்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Previous article12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!
Next articleகோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்!